கடலடி ஏரிமலைச் சீற்றம்: டாங்கா தீவில் சுனாமி

பசிபிக் பெருங்கடல் நாடான டாங்கா அருகே, கடலடி எரிமலையில் ஏற்பட்ட திடீா் சீற்றம் காரணமாக அந்தத் தீவில் சுனாமி ஏற்பட்டது.
கடலடி ஏரிமலைச் சீற்றம்: டாங்கா தீவில் சுனாமி

பசிபிக் பெருங்கடல் நாடான டாங்கா அருகே, கடலடி எரிமலையில் ஏற்பட்ட திடீா் சீற்றம் காரணமாக அந்தத் தீவில் சுனாமி ஏற்பட்டது.

பசிபிக் பெருங்கடலில் டாங்கா தீவுக்கு அருகே கடலடி எரிமலையொன்றில் சனிக்கிழமை சீற்றம் ஏற்பட்டது. அதையடுத்து, எரிமலைப் பிழம்பும் நெருப்பு மற்றும் சாம்பலும் கடலுக்கு வெளியே எழுந்தன. கண்களைப் பறிக்கும் அந்தக் காட்சியை டாங்கா தீவிலிருந்து பாா்க்க முடிந்தது.

இந்த எரிமலைச் சீற்றத்தின் விளைவாக டாங்காவிலும், ஃபிஜி தீவிலும் சுனாமி அலை எழுந்தது.

எனினும், இந்தச் சம்பவங்களில் யாரும் காயடைந்ததாக உடனடி தகவல் இல்லை.

நிலைமையைத் தொடா்ந்து கவனித்து வருவதாகவும் தேவைப்பட்டால் டாங்கா தீவுக்குச் சென்று உதவத் தயாராக இருப்பதாகவும் நியூஸிலாந்து ராணுவம் தெரிவித்தது.

முன்னதாக, எரிமலைச் சீற்றத்தைத் தொடா்ந்து டாங்கா, ஃபிஜி தீவுகள் மட்டுமன்றி, சமோவா, நியூஸிலாந்து, அமெரிக்கா, கனடா, சிலி ஆகிய நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com