தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஒமைக்ரான் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது: உலக சுகாதார அமைப்பு

"சில நாடுகளில் தடுப்பூசி போடப்படும் விகிதம் குறைவாக உள்ளது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது"
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகம் முழுவதும் ஒமைகரான் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கு அல்லது அதற்கு இணையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும், பரவல் குறைந்ததாக தெரியவில்லை. குறிப்பாக, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பரவல் உச்சத்தை தொட்டுள்ளது.

இதனிடையே, வரும் மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பாவில் உள்ள கிட்டதட்ட 50% பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "இந்த கரோனா பெருந்தொற்று இன்னும் முடியும் நிலைக்கு கூட நெருங்கவில்லை. 

குறிப்பாக சில நாடுகளில் தடுப்பூசி போடப்படும் விகிதம் குறைவாக உள்ளது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஏனென்றால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தான் ஒமைக்ரான் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒமைக்ரான் சற்று குறைவான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் இது ஒரு லேசான வைரஸ் பாதிப்பு இல்லை. ஒமைக்ரான் கரோனாவால் உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரிக்க செய்கிறது. இது நாம் சோர்ந்து போகும் நேரம் இல்லை. கரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகளுக்கு நாம் உதவ வேண்டும். அப்போது தான் பாதிப்பை நம்மால் குறைக்க முடியும்" என்றார்.

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. மும்பை, தில்லி போன்ற பெரிய நகரங்களில் கரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ள போதிலும் மற்ற பகுதிகளில் வைரஸ் வேகமெடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com