கரோனா பலி: ஆஸ்திரேலியாவில் இன்று மிக மோசமான நாள்

கரோனா பேரிடர் காலத்தில், ஆஸ்திரேலியாவில் இன்று மிக அதிகமான பலி எண்ணிக்கைப் பதிவாகி மிக மோசமான நாளாக மாறியுள்ளது. அந்நாட்டில் கரோனாவுக்கு இன்று மட்டும் 80 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா பலி: ஆஸ்திரேலியாவில் இன்று மிக மோசமான நாள்
கரோனா பலி: ஆஸ்திரேலியாவில் இன்று மிக மோசமான நாள்


கான்பெர்ரா: கரோனா பேரிடர் காலத்தில், ஆஸ்திரேலியாவில் இன்று மிக அதிகமான பலி எண்ணிக்கைப் பதிவாகி மிக மோசமான நாளாக மாறியுள்ளது. அந்நாட்டில் கரோனாவுக்கு இன்று மட்டும் 80 பேர் பலியாகியுள்ளனர்.

ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக, ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 80 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

ஆனால், அதிக மக்கள் தொகைக் கொண்ட நியூ சௌத் வேல்ஸ் பகுதியில் தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கைக் குறைந்திருப்பது சுகாதாரத் துறைக்கு சற்று நம்பிக்கை தருவதாக உள்ளது.

இதற்கு முன்பு, அந்நாட்டில் அதிகப்படியான பலி எண்ணிக்கை கடந்த செவ்வாயன்று பதிவானது. அன்று மடடும் 78 பேர் பலியாகினர், 

கரோனா பேரிடர் தொடங்கியதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மொத்த கரோனா பலி எண்ணிக்கை 3 ஆயிரத்துக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com