எரிமலையால் பாதிக்கப்பட்ட பகுதியில் இணைய சேவை முடக்கம்: உதவிக்கு வந்த எலான் மஸ்க்

எரிமலையால் பாதிக்கப்பட்ட டோங்கோ தீவிகளில் தொலைத்தொடர்பு சேவையை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவுகளில் ஒன்றான டோங்கோவில் எரிமலைகள் வெடித்துச் சிதறியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நாட்டின் அருகே நீருக்கு அடியே உள்ள எரிமலை வெடித்துச் சிதறியதில், சுமார் 20 கிலோமீட்டர் வரையிலும் சாம்பல் மற்றும் புகை மண்டலம் பரவியது.

நாட்டின் தலைநகரில் இருந்து 64 கிமீ தொலைவில் இந்த எரிமலை அமைந்துள்ளதால் டோங்கோ நாட்டிற்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எரிமலை வெடித்து சிதறியதன் காரணமாக ஏற்பட்ட அதிர்வு, பல கீமீ தொலைவில் உள்ள இந்தியா உள்பட பல நாடுகளில் உணரப்பட்டது.

சில தீவுகளில் சுனாமி பாதிப்பும் கூட ஏற்பட்டது. இது தொடர்பான விடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. எரிமலை வெடிப்பிற்குப் பின்னர் டோங்கோ எந்தளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் வகையிலான சில செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

டோங்கோ தலைநகர் உட்படப் பல தீவுகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதையே அது காட்டுகிறது. டோங்கோ நாட்டின் தலைநகரம் நுகுஅலோஃபா அடர் பழுப்பு சாம்பலால் சூழ்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. எரிமலை வெடிப்பு ஏற்பட்ட தீவு கிட்டத்தட்ட முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. 

இதன் காரணமாக, அங்கு தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை முழுவதுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில், தனக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் அங்கு இணைய சேவை வழங்கு முன்வந்துள்ளார் உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "ஸ்டார்லிங் திட்டத்தின் மூலம் இணைய சேவையை மீண்டும் வழங்க வேண்டுமானால் டோங்கோ மக்கள் எங்களிடம் தெரிவிக்கலாம்" என பதிவிட்டுள்ளார்.

எரிமலையால் பாதிக்கப்பட்ட டோங்கோ தீவிகளில் தொலைத்தொடர்பு சேவையை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், நாடு முழுவதும் இணைய சேவையை தொடங்க குறைந்தபட்சம் ஒரு மாதமாகலாம் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com