பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

பிலிப்பின்ஸில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு
பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு

மணிலா: பிலிப்பின்ஸில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 என பதிவானதாகவும், அந்நாட்டு நிலவரப்படி சனிக்கிழமை மதியம் 02:26:13 மணிக்கு பிலிப்பின்ஸின் கடலோர நகரமான சாரங்கானியின் 231 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

23.99 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் முதலில் 3.6951 டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் மற்றும் 126.6747 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டதாக ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com