இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் 100 ஊழியர்களுக்கு கரோனா

பாகிஸ்தானில் நிலவி வரும் கரோனா தொற்றின் ஐந்தாவது அலைக்கு இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் சுமார் 100 ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் 100 ஊழியர்களுக்கு கரோனா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலவி வரும் கரோனா தொற்றின் ஐந்தாவது அலைக்கு இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் சுமார் 100 ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆரம்பத்தில், ஏடிசி கட்டுப்பாட்டு கோபுரத்தின் சில அதிகாரிகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள இயக்குநர், இணை இயக்குநர், உதவி இயக்குநர் மற்றும் ஏடிசி கட்டுப்பாடு அதிகாரிகள் என மூத்த அதிகாரிகளுக்கும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

மேலும், இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால், அதிகமான பணியாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. 

விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமாபாத்தில் விமான சேவைகள் முழுமையாக தொடங்கப்பட்டுள்ளதால் , 
விமான நிலையம் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் விமான நிலைய அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com