சீனாவுக்கு பதிலடி; 44 பயணிகள் விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா

விமான சேவை குறைப்பு உள்பட எல்லைகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சீனா.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு செல்லும் 44 பயணிகள் விமானங்களை அமெரிக்கா வெள்ளிக்கிழமை ரத்து செய்துள்ளது. கரோனா வழிகாட்டுதல்களை காரணம் காட்டி அமெரிக்க விமானங்களுக்கு சீனா கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், அமெரிக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

விமான சேவை குறைப்பு உள்பட எல்லைகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீனா, கரோனா பாதிப்பு அதிகம் தென்படும் நாடுகளுடனான போக்குவரத்து சேவைகளை முடக்கியுள்ளது. கரோனா விதிகளின் மூலம் சீனாவுக்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

புறப்படும்போது பயணிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், சீனாவிற்கு வந்த பிறகு எடுக்கப்படும் சோதனையில் அவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதனை காரணம் காட்டி, அமெரிக்கா, டெல்டா, யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க போக்குவரத்துத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்கா, டெல்டா, யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் நலன் மீது பாதுப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.

விமானம் புறப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள், விமானத்தில் எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் உள்பட சீனாவின் அனைத்து விதிகளையும் பின்பற்றிவந்த போதிலும், வந்தடைந்த பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில் பயணிகளிக்கு கரோனா இருப்பது உறுதியானதற்கு அமெரிக்க நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 30 முதல் மார்ச் 29 வரை, ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சியாமன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com