அச்சுறுத்தும் கரோனா: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,57,393 பேருக்கு தொற்று

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,57,393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அச்சுறுத்தும் கரோனா: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,57,393 பேருக்கு தொற்று

 
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,57,393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,39,09,175 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 6,22,801 ஆகவும் உள்ளதாக சுகாதார செயலகங்கள் தெரிவித்துள்ளன.

பிரேசிலில் தொடர்ந்து நான்காவது நாளாக ஒரே நாளில் 1,50,000 பேருக்கு தொற்று பாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

உலகில் தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,39,09,175 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,22,801 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

கடந்த ஆண்டு உலக அளவில் அதிகயளவில் தொற்று பாதித்த நாடுகளின் பட்டியலில் இருந்து பிரேசில், அதிகயளவில் விரைந்து செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி திட்டத்தால் தொற்று பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைத்தது, இருப்பினும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவலே சமீபத்திய தொற்று பாதிப்பு மற்றும் இறப்புகள் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரேசிலில் 75.76 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். 148.3 மில்லியன் பேர் இரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 38.9 மில்லியன் பேர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com