சீனாவில் ஒரு மாத கால ஊரடங்கு ரத்து

சீனாவின் வடக்கு நகரமான சியானில் ஒரு மாத ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சீனாவின் வடக்கு நகரமான சியானில் ஒரு மாத ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நோய்த் தொற்று குறைந்துவருவதையடுத்து, ஒரு மாதம் அறிவித்திருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தலைநகர் பெய்ஜிங் மாவட்டத்தில் உள்ள 2 மில்லியன் குடியிருப்பாளர்கள் கரோனா சோதனைக்கு உட்படுத்த அரசு உத்தரவிடப்பட்டுள்ளனர். 

பெய்ஜிங்கில் பெங்டாய் மாவட்டத்தில் 25 பேர் மற்றும் பிற இடங்களில் 14 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர், தொற்று நோய்க்கான அதிக ஆபத்து இருப்பதாகக் கருதப்படும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், ஊழியர்கள், நிரூபர்கள் மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட உள்ளன. 

மேலும், போட்டியில் கலந்துகொள்ள உள்ள விளையாட்டு வீரர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். சியானில் பிப்ரவரி மாதத்தில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளதால், தொடர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com