அபுதாபி: ஹவுதி ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு, பெரும் சேதம் தவிர்ப்பு

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செலுத்திய சக்திவாய்ந்த ஏவுகணையை அபுதாபி ராணுவம் நடுவானில் வைத்து அழித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அபுதாபி: ஹவுதி ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு, பெரும் சேதம் தவிர்ப்பு

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செலுத்திய சக்திவாய்ந்த ஏவுகணையை அபுதாபி ராணுவம் நடுவானில் வைத்து அழித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப்  மாகாணத்தில்  எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர்  தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் இன்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2 சக்திவாய்ந்த ஏவுகணையை அபுதாபி மீது செலுத்தி உள்ளனர். இருப்பினும், ஏவுகணைத் தாக்குதலை நடுவானில் வைத்து முறியடித்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டுள்ளது.

ஏமன் கூட்டுப்படையினர் தாக்குதலில் இதுவரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 3000 பேர் வரை பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com