பிலிப்பின்ஸில் குறைந்து வரும் தொற்று: புதிதாக 24,938 பேருக்கு தொற்று

பிலிப்பின்ஸில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், திங்கள்கிழமை புதிதாக 24,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பின்ஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பிலிப்பின்ஸில் குறைந்து வரும் தொற்று: புதிதாக 24,938 பேருக்கு தொற்று


பிலிப்பின்ஸில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், திங்கள்கிழமை புதிதாக 24,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பின்ஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தென்கிழக்கு ஆசிய நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,442,056 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் தொற்று பாதிப்பு விகிதம் 40.6 சதவிதமாகக் குறைந்துள்ளதால், சிகிச்சை பெறுவோரின் 2,62,997 ஆகக் குறைந்துள்ளது என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது.
சுமார் 110 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிலிப்பின்ஸில், ஜனவரி 15 ஆம் தேதி நாட்டின் ஒருநாள் அதிகபட்ச பாதிப்பு 39,004 ஆக இருந்தது.

தொற்று பாதிப்புக்கு மேலும் 47 பேர் இறந்துள்ளனர், இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53,519 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் மணிலாவில் கரோனா உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளதாக சுகாதார செயலாளர் பிரான்சிஸ்கோ டியூக் தெரிவித்தார்.

மேலும் "மணிலாவில் கடந்த சில நாள்களாக வழக்குகள் குறைந்து வருவதாகவும், இது மொத்த பாதிப்புகளில் ஒரு சிறிய சதவிதமாகும்" என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டியூக் கூறினார்.

ஆனால் "தலைநகர் மணிலாவில் அதிகயளவிலான தொற்று பாதிப்புகள் உள்ளதாகவும், மெதுவாக பாதிப்பு குறைந்து வருவதாகவும்," சுகாதார துணைச் செயலாளர் மரியா ரொசாரியோ வெர்ஜியர் கூறியுள்ளார். தலைநகருக்கு அருகில் உள்ள பகுதிகளில் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். 

தொற்றால் பாதிக்கப்பட்ட பல பிலிப்பின்ஸ் மக்கள், ஆன்டிஜென் சோதனைகள் பட்டியலில் சேர்க்கப்படாத விலை குறைவான ஆன்டிஜென் சோதனைகளை செய்து வருவதால் உண்மையான பாதிப்பு தெரியவில்லை என கூறப்படுகிறது.

2020 இல் இருந்து தொற்றுக்கு எதிராக போராடி வரும் பிலிப்பின்ஸ்,  தற்போது நான்காவது அலையான உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றுடன் போராடி வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com