15 லட்சம் கி.மீ. தொலைவு சென்று இலக்கை அடைந்தது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பியுள்ள உலகின் மிகப்பெரிய ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி செயற்கைக்கோள் அதன் இலக்கை திங்கள்கிழமை அடைந்தது
விண்வெளியில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. (ஓவியரின் கற்பனை)
விண்வெளியில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. (ஓவியரின் கற்பனை)

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பியுள்ள உலகின் மிகப்பெரிய ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி செயற்கைக்கோள் அதன் இலக்கை திங்கள்கிழமை அடைந்தது.

பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது. 10 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.74,000 கோடி) மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் தொலைநோக்கி கடந்த டிசம்பா் 25-ஆம் தேதி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவைக் கடந்து அதன் இறுதி சுற்றுவட்டப் பாதையை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி திங்கள்கிழமை அடைந்தது. ‘எல் 2’ என்ற சுற்றுவட்டப் பாதையில் அது சுற்றிவரும்.

ஆரம்பகால பிரபஞ்சத்தின் ரகசியத்தை இத்தொலைநோக்கி வெளிக்கொண்டுவரும் என நம்பும் விஞ்ஞானிகளுக்கு இது மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. ஜூலை மாதத்திலிருந்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் தரவுகள் கிடைக்கக்கூடும் என நாசா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com