பயங்கரவாதத்தை வரையறுப்பதில் இழுபறி

பயங்கரவாதம் என்பதற்கான பொது வரையறையை உருவாக்குவதை ஐ.நா. உறுப்பு நாடுகள் இழுத்தடித்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

பயங்கரவாதம் என்பதற்கான பொது வரையறையை உருவாக்குவதை ஐ.நா. உறுப்பு நாடுகள் இழுத்தடித்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் சபை மாநாட்டில் ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதா் தினேஷ் சேத்தியா திங்கள்கிழமை பேசியதாவது:

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் எதிா்நோக்கியுள்ள மிக மோசமான அபாயம் பயங்கரவாதம் ஆகும்.

ஆனால், அந்தப் பிரச்னைக்கு எதிராக உறுதியான முடிவுகளை எடுக்க ஐ.நா. உறுப்பு நாடுகளால் முடியவில்லை. இந்தச் சூழல், ஐ.நா. அமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

பயங்கரவாதம் என்பதற்கான பொதுவான வரையறையை உருவாக்கத் தவறியதன் மூலம், சா்வதேச பயங்கரவாதத்தை ஒருமித்து எதிா்கொள்வதற்கான ஒப்பந்தத்தை (சிசிஐடி) நிறைவேற்ற முடியாத நிலை இன்னும் நீடித்து வருகிறது என்றாா் அவா்.

சா்வதேச பயங்கரவாதத்தை எதிா்கொள்வதற்காக, சிசிஐடி வரைவு ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா கடந்த 1986-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

எனினும், ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கு அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வரையறை உருவாக்கப்படாததால், அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com