பிரிட்டன்: கரோனா கட்டுப்பாடுகள் தளா்வு

பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனாவின் அச்சுறுத்தல் குறைந்து வருவதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன.
பிரிட்டன்: கரோனா கட்டுப்பாடுகள் தளா்வு

பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனாவின் அச்சுறுத்தல் குறைந்து வருவதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன.

இங்கிலாந்து பிராந்தியத்தில், அதிவேக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும், இரவு கேளிக்கை விடுதிகளுக்கு வருவோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் அதில் அடங்கும்.

தற்போது ஒமைக்ரானின் அச்சுறுத்தல் குறையத் தொடங்கியதையடுத்து, அத்தகைய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் தளா்த்தப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

மேலும், வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும், வகுப்புகளில் மாணவா்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற கடந்த வார அறிவுறுத்தல்களையும் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com