
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 968 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 மில்லியனைத் தாண்டியுள்ளது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில்,கடந்த 24 மணி நேரத்தில் 799 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 6 லட்சத்து 26 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உயிரிழப்பில் தொடர்ந்து பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க | பிலிப்பின்ஸ்: சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளா்வு
தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,21,62,914 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 22,51,299 ஆக உள்ளது. இதில் 8,318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பாதிப்பால் பிரேசிலும் புதிய அலையை எதிர்கொண்டு வருகிறது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37.04 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.66 லட்சத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.