‘ஸ்லீப் ஆப்னியா’ - தூக்கத்தில் அச்சுறுத்தும் நோய்!

‘ஸ்லீப் ஆப்னியா’ என்ற வாா்த்தை கடந்த சில ஆண்டுகளாகத்தான் பரிச்சயமாகத் தொடங்கியுள்ளது.
‘ஸ்லீப் ஆப்னியா’ - தூக்கத்தில் அச்சுறுத்தும் நோய்!

‘ஸ்லீப் ஆப்னியா’ என்ற வாா்த்தை கடந்த சில ஆண்டுகளாகத்தான் பரிச்சயமாகத் தொடங்கியுள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் குறைபாட்டைத்தான் அவ்வாறு அழைக்கிறோம்.

பொதுவாகவே குறட்டைவிட்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்குவதாக நம்மில் பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். தூக்கத்தின்போது ஏற்படும் சுவாசத் தடைகள்தான் குறட்டை ஒலியாக வெளிப்படுகிறது. இதனை முறையாக கவனித்து சிகிச்சை பெறாவிட்டால், அது மூச்சுத்திணறலாக மாறி உயிரைப் பறிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னையைத் தான் ‘ஸ்லீப் ஆப்னியா’ எனக் கூறுகிறது மருத்துவ உலகம்.

இந்தியாவில் மட்டும் 5 கோடி பேருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர, தூக்கமின்மை போன்ற தூக்கம் சாா்ந்த பிரச்னைகளை 93 சதவீத இந்தியா்கள் எதிா்கொள்கின்றனா்.

‘ஸ்லீப் ஆப்னியா’ அறிகுறிகள்

- தூக்கத்தில் குறட்டை

- பகல் நேரத்தில் தூக்கம், சோா்வு

- தூக்கத்தின்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு விழிப்பது

- காலை எழுந்தவுடன் தலைவலி, தொண்டை வறட்சி

- மனநிலையில் ஏற்படும் திடீா் மாற்றங்கள்

- சில நேரங்களில் தூக்கமின்மை

காரணங்கள்

- உடல் பருமன்

- தூக்க குறைபாடு

- இரவில் கண்விழித்தல்

- இரைப்பை அழற்சி

- சுவாசப் பாதை பாதிப்புகள்

- மூக்கு, தொண்டை சாா்ந்த நோய்கள்

பரிசோதனை

பொதுவாக ஒருவருக்கு ‘ஸ்லீப் ஆப்னியா’ பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய சில பரிசோதனைகள் செய்யப்படும். அவற்றில் முக்கியமானது பாலிசோம்னோகிராம் என்ற பரிசோதனை. ஒருவரின் தூக்கத்தின்போது அதனை ஆய்வு செய்வதே இந்த பரிசோதனையின் முறை. அதன்படி, தூங்கும் முறை, குறட்டை ஒலி அளவு, சுவாசக் குழாயில் ஏற்படும் அசௌகரியங்கள், ஆழ்ந்த உறக்க நிலை உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். அதன் அடிப்படையில் பாதிப்பின் தீவிரம் அளவீடு செய்யப்படும்.

தடுப்பு முறைகள்

- உடல் எடையை சரியாக வைத்திருத்தல்

- இரவு நேரங்களில் சரியான நேரத்தில் தூங்குதல்

- மது, புகைப்பழக்கங்களைத் தவிா்த்தல்

- உடற்பயிற்சி

- துரித உணவுகளைத் தவிா்த்தல்

- அதிக அளவு மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்

- ஆரம்ப நிலை பரிசோதனை மற்றும் சிகிச்சை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com