இலங்கையில் ஒலிக்கும் அபாயமணி ஏனைய பொருளாதார சிக்கல்களுக்குமானதே!

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நாடுகளிடமிருந்தும் உதவிகளைக் கோரிப் பெற்று வருகிறது இலங்கை.
இலங்கையில் ஒலிக்கும் அபாயமணி ஏனைய பொருளாதார சிக்கல்களுக்குமானதே!
இலங்கையில் ஒலிக்கும் அபாயமணி ஏனைய பொருளாதார சிக்கல்களுக்குமானதே!


பாங்காக்: நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நாடுகளிடமிருந்தும் உதவிகளைக் கோரிப் பெற்று வருகிறது இலங்கை.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பள்ளிகள் பல நாள்களாக மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் பள்ளிக்கு வருவதற்குத் தேவையான எரிபொருள் இல்லாததே, இந்த தொடர் விடுமுறைக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வகையில், சர்வதேச நிதியத்திடமிருந்து உதவியைப் பெற நாடு நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் கூறியிருந்தார்.

உக்ரைனில் நடந்துவரும் போரின் காரணமாக உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும் பொருளாதார பாதிப்புக்குள்ளான ஒரே நாடு இலங்கை என்று கருதினால் அது முற்றிலும் தவறு. உலகம் முழுவதும் ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருந்த நாடுகளுக்கும் இது ஒரு அபாயமணியாகவே அடிக்கிறது. உதாரணத்துக்கு பாகிஸ்தான், வெனிசுலா, ஜெனிவா.

பொருளாதார சிக்கல் காரணமாக 94 நாடுகளில் வாழும் 160 கோடி மக்கள், உணவு, எரிபொருள், நிதிச்சுமை போன்ற ஏதேனும் ஒரு சிக்கலை நிச்சயம் எதிர்கொண்டிருப்பார்கள். அதிலும் குறிப்பாக பொருளாதார சிக்கல் கடுமையாக பாதித்திருக்கும் நாடுகளில் வாழும் 120 கோடி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு செலவிடம் அதிகப்படியான தொகையால் கடும் நிதிச்சுமையால் அவதியுற்று வருவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நெருக்கடி மீட்புக் குழுவினர் கடந்த மாதம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உலகில் உள்ள ஏழ்மையான நாடுகளில் பாதிக்கும் மேல், மிகப்பெரிய கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன அல்லது அதன் அபாயத்துக்கு அருகில் உள்ளன என்கிறது ஐ.நா.

பல நாடுகள் ஏற்கனவே ஊழல், உள்ளூர் போர், இதர பேரிடர்களால் பொருளாதார பாதிப்புக்குள்ளாகிவிட்டன. உதாரணமாக ஆஃகானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்குப் பிறகு அங்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளின் நிதியுதவிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. தலிபான் அரசை ஏற்காத பல பணப்பரிமாற்றங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

அர்ஜென்டினாவை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு 10 பேருக்கும் 4 பேர் ஏழைகளாக இருக்கிறார்கள். அந்நாட்டு வங்கிகள் வெளிநாட்டுப் பணப்புழக்கம் இல்லாமல் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றன.

கரோனாவுக்கு முன்பு வரை வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரத்தைக் கொண்டிருந்த லாவோஸ், இலங்கைக்கு நிகராக கடன்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இதே வரிசையில்தான் லெபனான், மியான்மர், பாகிஸ்தான், போன்ற நாடுகளும் உள்ளன. இதனுடன் துருக்கி, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளும் இணைந்து கொண்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com