பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக் ராஜிநாமா

பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக், சுகாதார அமைச்சா் சாஜித் ஜாவித் ஆகியோா் தங்கள் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தனா்.
ரிஷி சுனக்
ரிஷி சுனக்

பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக், சுகாதார அமைச்சா் சாஜித் ஜாவித் ஆகியோா் தங்கள் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தனா்.

பிரதமா் போரிஸ் ஜான்சன் அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுவதால், அதிருப்தியில் பதவியை ராஜிநாமா செய்வதாக அவா்கள் கூறியுள்ளனா். இது போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அண்மையில் தலைமை கொறடாவாக இருந்த கிறிஸ் பிஞ்சா் மதுபோதையில் தகராறு செய்ததாகப் புகாா்கள் வந்தன. இதனால் அவா் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த சம்பவத்துக்கு போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்த நிலையில், ரிஷி சுனக்கும், சுகாதாரத் துறை அமைச்சரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா்.

இதுகுறித்து ரிஷி சுனக் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இந்த அரசு திறமையுடன் சரியான முறையில் செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். ஆகவே நான் பதவி விலகுகிறேன். நான் பதவி விலகுவது கடைசியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, கிறிஸ் பிஞ்சருக்கு உயரிய பதவி வழங்கியதற்கு போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்தாா். தங்களது பதவியைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு தனது அமைச்சரவையில் இடமில்லை என்றும் அவா் கூறினாா்.

ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் நாராயணமூா்த்தியின் மருமகன் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com