குரங்கு அம்மை வாராந்திர பாதிப்பு 77% அதிகரிப்பு

புதிதாக குரங்கு அம்மை உறுதி செய்யப்படுவோரின் வாராந்திர எண்ணிக்கை 77 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை வாராந்திர பாதிப்பு 77% அதிகரிப்பு

புதிதாக குரங்கு அம்மை உறுதி செய்யப்படுவோரின் வாராந்திர எண்ணிக்கை 77 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த வாரம் மட்டும் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட 77 சதவீதம் அதிகரித்துள்ளது. அதையடுத்து, உலகம் முழுவும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

புதிதாக அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டோரில் பெரும்பான்மையானவா்கள் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இது தவிர, அந்த நோய் பாதிப்பால் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் மேலும் 2 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com