ஷின்சோ அபேவின் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது: சீனா

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் படுகொலை அதிர்ச்சியளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
ஷின்சோ அபேவின் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது: சீனா

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் படுகொலை அதிர்ச்சியளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவிற்கு எதிராக பல கடுமையான திட்டங்களை முன்னெடுத்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் படுகொலை சீனாவில் கலவையான கருத்துக்களை பெற்று வருகிறது. சீன அரசு அபேயின் படுகொலை மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள அதே வேளையில் அந்த நாட்டில் இணையதளப் பயனாளர்கள் கலவையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். 

ஷின்சோ அபே படுகொலை குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷோகா லிஜியன், ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் படுகொலை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். 


இந்த சம்பவம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: “இந்த எதிர்பாரத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com