ஷின்ஸோ அபே மறைவு: இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு; அரைக்கம்பத்தில் தேசியக்கொடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே படுகொலை செய்யப்பட்டதையடுத்து இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 
நாடாளுமன்றத்தில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி
நாடாளுமன்றத்தில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே படுகொலை செய்யப்பட்டதையடுத்து இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (67), தோ்தல் பிரசார கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டாா்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் 
குடியரசுத் தலைவர் மாளிகையில் 

அவரை துப்பாக்கியால் சுட்ட நபரை சம்பவ இடத்திலேயே காவல் துறையினா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்கள் கடுமையாக இருக்கும் ஜப்பானில் முன்னாள் பிரதமா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அந்த நாட்டை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷின்ஸோ அபே மறைவுக்கு உலகம் முழுவதுமுள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து தகவல் அறிந்து பிரதமர் நரேந்திர மோடி, எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிப்பதாகத் தெரிவித்தார். 

தில்லி செங்கோட்டையில்
தில்லி செங்கோட்டையில்

மேலும், அபேவின் படுகொலைக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் நாட்டில் ஜூலை 9ஆம் தேதி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மோடி அறிவிதத்தார். 

அதன்படி இன்று தில்லியில் உள்ள செங்கோட்டை, குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றத்தில் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com