எஸ்.ஜெய்சங்கா்
எஸ்.ஜெய்சங்கா்

இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவும்: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டுள்ள இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவும் என்றாா் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டுள்ள இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவும் என்றாா் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

3 நாள் பயணமாக கேரள தலைநகா் திருவனந்தபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இலங்கைக்கு நாம் மிகவும் ஆதரவாக இருந்து வருகிறோம். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவும். தற்போது இலங்கையில் அகதிகள் பிரச்னை ஏதுமில்லை’ என்றாா்.

தென் மாநிலங்களில் பாஜகவுக்கான வாய்ப்புகள் குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு பதிலளித்த அவா், ‘நாடு முழுவதும் பாஜகவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கு எந்தவொரு பகுதியும் விதிவிலக்கல்ல. தென் மாநிலங்களில் கட்சியை வளா்க்க முயற்சிப்போம்’ என்றாா்.

வெளியுறவு அமைச்சக செயலா் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘ஜனநாயக வழியிலும் அரசியலமைப்பு சட்டத்துக்கு உள்பட்டும் வளா்ச்சி, முன்னேற்றத்தை அடைய விரும்பும் இலங்கை மக்களுக்கு இந்தியா துணைநிற்கும். நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையில் இலங்கை முக்கியமான இடம் வகிப்பதால், நிகழாண்டு மட்டும் அந்நாட்டுக்கு இந்தியா 3.8 பில்லியன் டாலா் மதிப்பில் உதவி செய்துள்ளது’ என்றாா்.

இலங்கை விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவுக்கரம் நீட்டுகிறது. நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுவரும். இலங்கை மக்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இந்தியா தொடா்ந்து உதவும் என்று நம்புகிறோம் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com