ஐரோப்பாவில் ரூ.1.10 லட்சம் கோடி ரஷிய சொத்துகள் முடக்கம்

ஐரோப்பாவில் ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான ரஷியாவின்  சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

ஐரோப்பாவில் ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான ரஷியாவின்  சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 140 நாள்களை நெருங்க உள்ளது. கடுமையான இழப்புகளை சந்தித்து வரும் வேளையிம் தீவிரமாக ரஷியப்படைகள் உக்ரைனைத் தாக்கி வருகின்றன. 

குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் சாசிவ் யாா் நகரில் ரஷியா ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, போரைத் துவங்கிய ரஷியாவுக்கு பல்வேறு நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்தது. அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பாவில் உள்ள ரஷியாவின் சொத்துகளை முடக்குவதாகவும் அறிவித்தது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நீதி ஆணையர் டிடியர் ரெய்ண்டர்ஸ், பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து தற்போது வரை 13.8 பில்லியன் டாலர்(ரூ.1.10 லட்சம் கோடி) மதிப்புள்ள ரஷ்ய சொத்துக்களை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்கட்டமாக 5 உறுப்பு நாடுகள் மட்டுமே சொத்துகளை வழங்கியுள்ளன என்றும் விரைவில் மற்ற நாடுகளும் ரஷிய சொத்துகளை முடக்குவார்கள் என  டிடியர் ரெய்ண்டர்ஸ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com