தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலனை

உக்ரைனில் தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக பரிசீலனை செய்வதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலனை

உக்ரைனில் தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக பரிசீலனை செய்வதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். 135 நாள்களைக் கடந்து தொடரும் இந்தப் போரில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியப் படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

குறிப்பாக, கிழக்கு உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரை ரஷிய படை முழுமையாகக் கைப்பற்றிய நிலையில் பல்வேறு இடங்களிலும் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், போருக்கு இடையே உக்ரைனில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸிகியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

உக்ரைனில் தன்பாலின இணைகளுக்குத் தடையில்லை என்றாலும் அவர்கள் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்வது சட்டப்பூர்வமாக்கப்படவில்லை.

மேலும், தன்பாலின இணைகளில் யாராவது இறந்தால் அவர்களின் உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கக்கூடாது என சட்டம் இருப்பதால்  தற்போது போர் நடந்துவரும் சூழலில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்ள சட்டப்பூர்வ அனுமதியை வழங்க வேண்டுமென 28,000 பேர் கையெழுத்திட்ட  மனு அதிபர் ஸெலென்ஸ்கிக்கு அனுப்பட்டதுடன் 10 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com