
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று பகல் 12 மணிமுதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து அதிபர் மற்றும் பிரதமரின் மாளிகை, அலுவலகங்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இன்று பகல் 12 மணிமுதல் நாளை மாலை 5 மணிவரை தலைநகர் கொழும்பில் ஊரடங்கை அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | 'கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யவில்லை எனில்...' - அவைத் தலைவர் எச்சரிக்கை!
முன்னதாக, மக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுருந்தார். மேலும், சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுருந்தார்.