
இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்துள்ளார்.
இலங்கை அதிபர் பதவியிலிருந்து இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் இன்று (ஜூலை 14) தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜிநாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.
இதையும் படிக்க:இலங்கை அதிபருக்கு அடைக்கலம் தருகிறோமா? சிங்கப்பூர் விளக்கம்
இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டில் அசாதாரணமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி மக்கள் நடத்திய கடும்போராட்டம் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபட்ச அந்நாட்டை விட்டு தப்பியோடினார்.
மேலும், மக்கள் போராட்டம் வலுவடைந்ததையடுத்து, நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இதையும் படிக்க: இவர்களால் தான் ஜப்பானின் முன்னாள் பிரதமர் இறந்தார்: ஃபுமியோ கிஷிடா
இதுவரை கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்காத நிலையில் அவர் மாலத்தீவில் தஞ்சமடைந்திருந்ததாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மாலத்தீவில் உள்ள இலங்கை மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்களில் குதித்ததையடுத்து அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அவர் இன்று (ஜூலை 14) தனது அதிபர் பதவியினை ராஜிநாமா செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.