எஸ்சிஓ அமைப்பின் கலாசார, சுற்றுலா தலைநகா் வாராணசி

 இந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வாராணசி நகரம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) கலாசார மற்றும் சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வாராணசி நகரம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) கலாசார மற்றும் சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் ஜங் மிங், பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

எஸ்சிஓ அமைப்பின் 2022-23-ஆம் ஆண்டுக்கான கலாசார, சுற்றுலாத் தலைநகரமாக வாராணசி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோா் ஆண்டும் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் நகரங்கள் சுழற்சி முறையில் சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்படும். அந்த வரிசையில் முதலாவது சுற்றுலாத் தலைநகரமாக இந்தியாவின் பழைமையான நகரங்களில் ஒன்றான வாராணசி அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சிஓ நாடுகளின் தலைவா்கள் மாநாடு, வரும் செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டுக்குப் பிறகு எஸ்சிஓ அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் மாநாட்டையும் இந்தியா தலைமையேற்று நடத்தும் என்றாா் அவா்.

சீனாவின் பெய்ஜிங் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷியா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com