இத்தாலியில் 2 கோடியை கடந்த கரோனா பாதிப்பு

இத்தாலியில் கரோனாவால் பாதிக்கபட்டவா்களின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்தது.
italy055303
italy055303

இத்தாலியில் கரோனாவால் பாதிக்கபட்டவா்களின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்தது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 89,830 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,00,76,863-ஆக உயா்ந்துள்ளது.

இது தவிர, கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 111 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அந்த நோய்க்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,69,846-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பாதிப்புப் பட்டியலில் இத்தாலி 7-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com