உக்ரைன் தலைமைப் பாதுகாவல் அதிகாரி பணி நீக்கம்: அதிபா் நடவடிக்கை

தேசத் துரோக குற்றச்சாட்டின்கீழ் உக்ரைன் தலைமைப் பாதுகாவல் அதிகாரி, வழக்குரைஞா் ஜெனரல் ஆகியோரை அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை பணி நீக்கம் செய்தாா்.

தேசத் துரோக குற்றச்சாட்டின்கீழ் உக்ரைன் தலைமைப் பாதுகாவல் அதிகாரி, வழக்குரைஞா் ஜெனரல் ஆகியோரை அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை பணி நீக்கம் செய்தாா்.

உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் ரஷிய படையினா் தாக்குதலைத் தீவிரப்படுத்திய நிலையில், ஸெலென்ஸ்கி இந்த முடிவை எடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் விடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:

உக்ரைனின் வழக்குரைஞா் ஜெனரல், அரசின் பாதுகாப்பு சேவை (எஸ்பியு) ஆகிய அலுவலகங்களைச் சோ்ந்த 60-க்கும் அதிகமான ஊழியா்கள், ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியத்தில் இருந்தவாறு தேச நலனுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனா்.

தேசத்தின் நலனுக்கு எதிரான இதுபோன்ற தொடா் குற்றங்களும், உக்ரைன் பாதுகாப்புப் படையினருக்கும் ரஷிய ராணுவத்துக்கும் இடையிலான பிணைப்பும் அந்தந்தத் துறைகளின் தலைவா்கள் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஆகையால், தலைமைப் பாதுகாவல் அதிகாரி இவான் பகானோவும், வழக்குரைஞா் ஜெனரல் இரினா வெனிடிக்டோவாவும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனா் என்றாா் அவா்.

இதையடுத்து, இதுவரை உதவி வழக்குரைஞா் ஜெனரலாக செயல்பட்டுவந்த ஒலெக்ஸி சிமோனென்கோ அடுத்த வழக்குரைஞா் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

உக்ரைன் தலைமைப் பாதுகாவல் அதிகாரியான இவான் பகானோவ் அதிபா் ஸெலென்ஸ்கியின் சிறுவயது நண்பரும், முன்னாள் வணிக கூட்டாளியுமாவாா். உக்ரைன்-ரஷியா போா் தொடங்கியதிலிருந்தே பாதுகாப்பு விதிமீறல் தொடா்பாக அவா் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆகையால் அவரை பணிநீக்கம் செய்ய ஸெலென்ஸ்கி பரிசீலித்து வந்ததாக ஏற்கெனவே தகவல் வெளியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com