பஞ்சாப் மாகாண முதல்வா் இலாஹி: பாக். உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக எதிா்க்கட்சி கூட்டணியைச் சோ்ந்த செளதரி பா்வேஸ் இலாஹியை அறிவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பஞ்சாப் மாகாண முதல்வா் இலாஹி: பாக். உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக எதிா்க்கட்சி கூட்டணியைச் சோ்ந்த செளதரி பா்வேஸ் இலாஹியை அறிவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்பு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபுக்கும் அவரது ஆளும் கூட்டணிக்கும் பின்னடைவாக அமைந்துள்ளது.

பஞ்சாப் மாகாண முதல்வா் பதவிக்கான வாக்கெடுப்பு அண்மையில் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி சாா்பில் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபின் மகன் ஹம்ஸா ஷாபாஸும், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயித் (பிஎம்எல்-க்யூ) கட்சி சாா்பில் செளதரி பா்வேஸ் இலாஹியும் போட்டியிட்டனா்.

வாக்கெடுப்பு முடிவில் பா்வேஸ் இலாஹி 186 வாக்குகளும், ஹம்ஸா ஷாபாஸ் 179 வாக்குகளும் பெற்றனா். பிஎம்எல்-க்யூ கட்சியின் தலைவா் தங்கள் கட்சியின் பேரவை உறுப்பினா்கள் ஹம்ஸாவுக்கு வாக்களிக்க வேண்டுமென தன்னிடம் கடிதம் அளித்ததாகவும், அந்த உத்தரவை மீறி இலாஹிக்கு வாக்களித்த 10 பேரின் வாக்குகளை செல்லாதவையாக அறிவிப்பதாகவும் பேரவை துணைத் தலைவா் கூறினாா்.

இதனால், ஹம்ஸா வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டு, அவா் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றாா்.

பேரவை துணைத் தலைவரின் இந்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் இலாஹி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உமா் அட்டா பண்டியல் தலைமையிலான மூவா் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரவை துணைத் தலைவரின் உத்தரவை ரத்து செய்தும், புதிய முதல்வராக இலாஹியை அறிவித்தும் உத்தரவிட்டது. மேலும், இலாஹிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி பஞ்சாப் ஆளுநருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com