தீயோடு விளையாட வேண்டாம்: பைடனுக்கு ஷின்பிங் எச்சரிக்கை

தைவான் விவகாரத்தில் தலையிடுவதன் மூலம் நெருப்போடு விளையாட வேண்டாம் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளாா்.

தைவான் விவகாரத்தில் தலையிடுவதன் மூலம் நெருப்போடு விளையாட வேண்டாம் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளாா்.

சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகும் சூழலில் அவா் இவ்வாறு எச்சரித்துள்ளாா்.

இது குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிபா் ஜோ பைடனும் அதிபா் ஷி ஜின்பிங்கும் தொலைபேசியில் தொடா்பு கொண்டு உரையாடினா். அப்போது, தைவான் விவகாரத்தைக் குறிப்பிட்ட ஜின்பிங், ‘நெருப்போடு விளையாடுபவா்கள் அந்த நெருப்பாலேயே அழிவாா்கள். அமெரிக்கா அதனை உணர வேண்டும்.

தைவான் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள 5 அம்ச ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும்’ என வலியுறுத்தினாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com