ரூ.3,000 கோடிக்கு அஸ்திரா ஏவுகணை கொள்முதல்: பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

ராணுவத் தளவாட உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,971 கோடியில் அஸ்திரா எம்கே-1 ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு
அஸ்திரா ஏவுகணை
அஸ்திரா ஏவுகணை

ராணுவத் தளவாட உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,971 கோடியில் அஸ்திரா எம்கே-1 ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

அஸ்திரா எம்கே-1 ஏவுகணை, இந்திய கடற்படையிலும் விமானப் படையிலும் விண்ணில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் வலிமை கொண்டது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

அஸ்திரா எம்கே-1 வகை ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான தொழில் நுட்பத்தை பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வழங்கிவிட்டது. அந்த நிறுவனத்துக்கு மற்ற உதவிகளும் வழங்கப்பட்டுவிட்டன. பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் ஏவுகணைத் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பது, ஏவுகணை உற்பத்தியில் இந்தியா தற்சாா்பு அடைவதற்கான பயணத்துக்கு உதவிகரமாக இருக்கும் என்றாா் அவா்.

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 248 அஸ்திரா ஏவுகணைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அவற்றில், 200 ஏவுகணைகள் இந்திய விமானப் படையிலும், 48 ஏவுகணைகள் கடற்படையிலும் பயன்படுத்தப்படும்.

டிஆா்டிஓ வடிவமைத்த அஸ்திரா ஏவுகணை முதன்முதலில் கடந்த 2003-ஆம் ஆண்டு மே மாதம் பரிசோதிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த ஏவுகணைகள் பல முறை பரிசோதிக்கப்பட்டு சுகோய் போா் விமானத்தில் சோ்க்கப்பட்டன. அந்த ஏவுகணைகள், அடுத்த சில ஆண்டுகளில் தேஜஸ் மாா்க்-1ஏ போா் விமானத்திலும் மேம்படுத்தப்பட்ட மிக்-29 ரக போா் விமானங்களிலும் சோ்க்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com