இஸ்ரேல்: ஐக்கிய அரசு அமீரகத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்

ஐக்கிய அரபு அமீரகத்துடன் இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.
இஸ்ரேல்: ஐக்கிய அரசு அமீரகத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்

ஐக்கிய அரபு அமீரகத்துடன் இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது. அரபு நாடொன்றுடன் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள முதல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இதுவாகும்.

இது குறித்து இஸ்ரேலுக்கான ஐக்கிய அரபு அமீரகத் தூதா் முகமது அல் காஜா வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இதுவரை எட்டப்படாத சாதனையை இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் எட்டியுள்ளன; இதன் மூலம் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே வா்த்தகம் மேற்கொள்ளப்படும் 96 சதவீத பொருள்களுக்கான இறக்குமதி வரி முழுமையாக ரத்து செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com