ரஷியாவை நாம் அவமானப்படுத்தக் கூடாது: பிரான்ஸ் அதிபர்

நாம் ரஷியாவை அவமானப்படுத்தக் கூடாது என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாம் ரஷியாவை அவமானப்படுத்தக் கூடாது என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார்.

ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்த நாள் முதலே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய இந்த செயல் சில கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளால் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வந்தது. பிரான்ஸ் அதிபர் ரஷியாவிடம் இப்படி நடந்து கொண்டால் புதினுக்கு நம்மால் அழுத்தம் கொடுக்க முடியாது என சில நாடுகள் கடிந்து கொண்டன.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் மாக்ரோன், ரஷியாவினை நாம் அவமானப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வது போருக்குப் பிந்தைய உறவுகளை பெரிதும் பாதிக்கும் என தெரிவித்தார். உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் இதனைத் தெரிவித்தார். மேலும், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் தீர்வு காணும் முயற்சியில் பிரான்ஸ் ஒரு மத்தியஸ்தராக செயல்பட விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் உக்ரைனுக்கு பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இருப்பினும், ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளைப் போல் உக்ரைன் தலைநகருக்குச் சென்று தனது ஆதரவினை மாக்ரோன் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவருடைய அந்த ஆதரவையே உக்ரைன் எதிர்பார்க்கிறது.

பிரான்ஸ் தனது சீசர் ஹவிட்சர் உள்ளிட்ட சக்திவாய்ந்த  ராணுவ ஆயதங்களை தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. அதேபோல ஆயுதங்கள் தயாரிப்பையும் நாட்டில் அதிகப்படுத்த இம்மானுவேல் மாக்ரோன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com