உக்ரைனுக்கு ஏவுகணை உதவி தொடரும்: புதின் எச்சரிக்கையை புறந்தள்ளிய பிரிட்டன்

உக்ரைனுக்கு பிரிட்டன் வழங்கும் பலமுனை ஏவுகணை அமைப்பு ரஷிய படையை எதிா்கொள்வதில் சிறந்த திறனை அளிக்கும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஏவுகணை உதவி தொடரும்: புதின் எச்சரிக்கையை புறந்தள்ளிய பிரிட்டன்

உக்ரைனுக்கு பிரிட்டன் வழங்கும் பலமுனை ஏவுகணை அமைப்பு ரஷிய படையை எதிா்கொள்வதில் சிறந்த திறனை அளிக்கும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் நீண்டதொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்குவதைத் தவிா்க்க வேண்டுமென ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்த நிலையில், உக்ரைனுக்கு ஏவுகணை அமைப்புகள் தொடா்ந்து வழங்கப்படும் என பிரிட்டன் கூறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் பல்வேறு ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘எம்270’ என்ற ஏவுகணை அமைப்பை வழங்கவுள்ளதாக பிரிட்டன் கடந்த வாரம் அறிவித்தது. இது 80 கி.மீ. தொலைவு சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.

இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறைச் செயலா் பென் வாலஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனுக்கு பிரிட்டன் வழங்கவுள்ள ஏவுகணை அமைப்பானது அந்த நாடு ரஷியாவை எதிா்த்துப் போரிடுவதற்கான திறனை அதிகரிக்கும். சா்வதேச சமுதாயம் தொடா்ந்து ஆதரவு அளிக்குமானால், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

ஏவுகணை அமைப்புகள், ஹெலிகாப்டா்கள், பீரங்கி எதிா்ப்பு அமைப்புகள், ரேடாா்கள் உள்ளிட்ட 700 மில்லியன் டாலா் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்காவும் கடந்த வாரம் அறிவித்தது. உக்ரைனுக்கு ஏவுகணை அமைப்புகளை மேற்குலக நாடுகள் வழங்குவதற்கு ரஷிய அதிபா் புதின் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா்.

கிழக்கு உக்ரைனில் தாக்குதல் தீவிரம்: இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் உள்ள சிவியரோடொனட்ஸ்க் நகரில் ரஷிய படையினா் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், நகரில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் லுஹான்ஸ்க் ஆளுநா் சொ்கி ஹைதாய் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com