உக்ரைனில் போரினால் இதுவரை 287 குழந்தைகள் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா போரினைத் தொடங்கிய நாள் முதல் (பிப்ரவரி 24) இன்று (ஜூன் 11) வரை குறைந்தது 287 குழந்தைகள் இறந்துள்ளதாக உக்ரனைன் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

உக்ரைன் மீது ரஷியா போரினைத் தொடங்கிய நாள் முதல் (பிப்ரவரி 24) இன்று (ஜூன் 11) வரை குறைந்தது 287 குழந்தைகள் இறந்துள்ளதாக உக்ரனைன் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெலிகிராம் செயலியில் ராணுவ அதிகாரிகள் கூறியிருப்பதாவது, “ ரஷியா உக்ரைனின் மீதுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் நிகழும் குற்றங்கள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதில் ரஷிய ராணுவப்படைகளின் தாக்குதலினால் மரியூபோல் பகுதியில் மேலும் 24 குழந்தைகள் இறந்துள்ளது தெரிய வந்தது. இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை இறுதியானது கிடையாது. இன்னும் குழந்தைகள் யாரேனும் இறந்துள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.” என்றனர்.

ரஷியா-உக்ரைன் போர் தொடங்கப்பட்டதில் இருந்து 250-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 50 லட்சம் பேர் வன்முறையில் சிக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளதாக இந்த மாதத்தின் (ஜூன்) தொடக்கத்தில் ஐநா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com