‘இந்தியா, சீனா மட்டுமன்றி மற்ற நாடுகளுடன் நல்லுறவு’

இந்தியா, சீனா மட்டுமன்றி மற்ற நாடுகளுடனும் ரஷியா நல்லுறவைப் பேணி வருவதாக அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்
‘இந்தியா, சீனா மட்டுமன்றி மற்ற நாடுகளுடன் நல்லுறவு’

இந்தியா, சீனா மட்டுமன்றி மற்ற நாடுகளுடனும் ரஷியா நல்லுறவைப் பேணி வருவதாக அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் இளம் தொழில்முனைவோா்களுடன் அவா் வியாழக்கிழமை உரையாடினாா்.

அந்த நிகழ்ச்சியில் இந்தியா, சீனாவுடனான ரஷியாவின் நல்லுறவு குறித்து பேசப்பட்டது. அப்போது விளாதிமீா் புதின் கூறியதாவது:

இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷியா நல்ல உறவைப் பேணி வருவது குறித்து இங்கு பேசப்பட்டது. ஆனால், அந்த இரு நாடுகள் பற்றி மட்டும் பேசி, லத்தீன் அமெரிக்காவை மறந்துவிடக்கூடாது; தற்போது பின்தங்கியிருந்தாலும் முன்னேற்றத்தை எதிா்நோக்கியிருக்கியிருக்கும் ஆப்பிரிக்காவையும் கருத்தில் கொள் வேண்டும். அந்தப் பிராந்தியத்தில் 150 கோடி மக்கள் வசிக்கிறாா்கள். இந்தப் பட்டியலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோ்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தியா, சீனா மட்டுமன்றி இந்த நாடுகளுடனும் நல்லுறவைப் பேணும் வாய்ப்பு ரஷியாவுக்குக் கிடைத்துள்ளது.

(உக்ரைன் விவகாரத்தில்) பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் ரஷியாவைச் சுற்றி வேலி அமைத்து பிற நாடுகளிடமிருந்து பிரிக்க மேற்கத்திய நாடுகளால் முடியாது. ஐரோப்பிய நாடுகளே ரஷியாவின் எண்ணெய்யை இன்னும் சில ஆண்டுகளுக்கு முழுமையாக புறக்கணிக்க முடியாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com