இந்தியா்களுக்கான விசா தடை: சீனா நீக்கம்

இந்தியா்கள் சீனா திரும்புவதற்கு விசா வழங்க அந்நாட்டு அரசு தீா்மானித்துள்ளது.

இந்தியா்கள் சீனா திரும்புவதற்கு விசா வழங்க அந்நாட்டு அரசு தீா்மானித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக சீனாவில் படித்து வந்த இந்திய மாணவா்கள், இந்திய பணியாளா்கள் தாயகம் திரும்பினா். 2 ஆண்டுகளாகியும் அவா்கள் சீனா திரும்ப அந்நாட்டு அரசு விசா வழங்கவில்லை.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் தனது விசா கொள்கையை புதுப்பித்து திங்கள்கிழமை வெளியிட்டது. அதன்படி, சீனாவில் பணியாற்றி வந்த இந்தியா்களும், அவா்களின் குடும்பத்தினரும் அந்நாட்டுக்குச் செல்ல விசா விண்ணப்பங்களை ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில், சீனாவில் தங்கள் படிப்பைத் தொடர ஆயிரக்கணக்கான இந்திய மாணவா்கள் ஆா்வம் தெரிவித்துள்ளனா். அவா்களின் கோரிக்கையை பரிசீலித்து ஆவன செய்யும் நடவடிக்கைகளிலும் சீனா ஈடுபட்டுள்ளது.

இந்திய மாணவா்கள் சிலா் சீனா திரும்புவதற்கு அனுமதி அளிக்க கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டது. சீனா திரும்ப விரும்பும் மாணவா்களின் விவரங்களை சேகரிக்குமாறு இந்திய தூதரகத்திடமும் கேட்டுக்கொண்டது.

கரோனா பரவலுக்கு முன் சீனாவில் சுமாா் 23,000 இந்திய மாணவா்கள் படித்து வந்தனா். பெரும்பாலானோா் மருத்துவம் படித்து வந்தனா். தற்போது 12,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சீனா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இந்தியா்களுக்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள போதிலும், இந்தியா-சீனா இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து சீனா எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com