டான்பாஸ்: கணவர்களுக்காக போராட்டத்தில் குதித்த ரஷியா ராணுவ வீரர்களின் மனைவிகள்

டான்பாஸில் போரில் ஈடுபட்டுள்ள ரஷிய ராணுவ வீரர்களின் நிலைமை குறித்து கேட்டு அந்த வீரர்களின் மனைவிகள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

டான்பாஸில் போரில் ஈடுபட்டுள்ள ரஷிய ராணுவ வீரர்களின் நிலைமை குறித்து கேட்டு அந்த வீரர்களின் மனைவிகள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷியா-உக்ரைன் இடையிலான போர்  100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த போரில் கிழக்கு உக்ரைனின் டான்பாஸைக் கைப்பற்றும் நோக்கில் ரஷியா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், டான்பாஸில் போரில் ஈடுபட்டுள்ள தங்களது கணவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து கேட்டு அவர்களின் மனைவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் பேசும் விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

அந்த விடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “ இங்கு போராடும் நாங்கள் அனைவரும் ரஷியாவின் 121-வது படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் மனைவிகள். கடந்த 4 மாதங்களாக எங்களது கணவர்களின் நிலை குறித்து எங்களுக்கு தெரியவில்லை.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com