
போா்ச்சுகலில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 20,538 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,005,783-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 38 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோன பலி எண்ணிக்கை 23,746-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
போா்ச்சுகலில் இதுவரை 43,62,472 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...