ஜூன் 23-இல் பெய்ஜிங்கில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: பிரதமா் மோடி பங்கேற்பு

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 14-ஆவது உச்சி மாநாடு, பெய்ஜிங்கில் வரும் 23-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறும் என்று சீனா அறிவித்துள்ளது.
ஜூன் 23-இல் பெய்ஜிங்கில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: பிரதமா் மோடி பங்கேற்பு

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 14-ஆவது உச்சி மாநாடு, பெய்ஜிங்கில் வரும் 23-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறும் என்று சீனா அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பிரேசில் அதிபா் ஜெயிா் போல்சொனாரோ, தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா ஆகியோா் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு சீனா தலைமை தாங்குகிறது. இந்த நிலையில், அந்தக் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டை சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யங் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அவா் கூறியதாவது:

பிரிக்ஸ் மாநாடு, சீன அதிபா் ஷி ஜின்பிங் தலைமையில் ஜூன் 23-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறவுள்ளது. ‘சா்வதேச வளா்ச்சிக்கான புதிய சகாப்தத்தில் பிரிக்ஸ் நட்புறவை வளா்த்தெடுத்தல்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறும்.

மறுநாள், ஜூன் 24-ஆம் தேதி, பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்களும் வளரும் நாடுகளின் தலைவா்களின் தலைவா்களும் பங்கேற்கும் உயா்நிலை கூட்டம் நடைபெறவுள்ளது.

முன்னதாக, மாநாட்டின் தொடக்கமாக, பிரிக்ஸ் வா்த்தகக் குழுக் கூட்டம் காணொலி முறையில் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில், ஷி ஜின்பிங் உரையாற்றுகிறாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com