8 பேரில் ஒருவருக்கு மன அழுத்த சிக்கல்: உலக சுகாதார நிறுவனம்

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் உலகளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் உலகளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மன ஆரோக்கியம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலகம் முழுவதும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவர்களின் தரவுகள் குறித்த விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி கரோனா பொதுமுடக்கக் காலத்தில் உலகளவில் மன அழுத்தம் மற்றும் கவலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 25 சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முந்தைய 2019ஆம் ஆண்டு மன ஆரோக்கியம் தொடர்பான சிக்கலில் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம் இவற்றில் 14 சதவிகிதத்தினர் வளர் இளம் பருவத்தினர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் உலக நாடுகள் தங்களது சுகாதார நிதிநிலை அறிக்கைகளில் மன ஆரோக்கியம் சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியின் அளவு ஒட்டுமொத்த சுகாதாரத் திட்டங்களில் 2 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மரணத்திலும் 20 தற்கொலை முயற்சிகள் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள இந்த ஆய்வறிக்கை ஒவ்வொரு 100 மரணங்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

மன அழுத்தம் தொடர்பான சிக்கல்களைக் களைவதில் உலக நாடுகள் முனைப்பு காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் வளமான வாழ்க்கைக்கு தேவையான சுகாதாரத் திட்டங்களில் மன ஆரோக்கியத்திற்கான முதலீடுகளை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com