உக்ரைன் போர் பல ஆண்டுகள் நீடிக்கும்: நேட்டோ தலைவர் எச்சரிக்கை

உக்ரைன் போர் பல ஆண்டுகள் நீடிக்கும் என்றும், இந்த போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க மேற்கு நாடுகள் தயாராக வேண்டும்
நேட்டோ நாடுகளின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்
நேட்டோ நாடுகளின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்

உக்ரைன் போர் பல ஆண்டுகள் நீடிக்கும் என்றும், இந்த போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க மேற்கு நாடுகள் தயாராக வேண்டும் என்று நேட்டோ நாடுகளின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஞாயிற்றுக்கிழமை ஜெர்மன் செய்தித்தாளுக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் நேட்டோ படைகள் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ஜெர்மனி செய்தித்தாள் ஒன்றுக்கு ஜென்ஸ் ஸ்டொலன்பெர்க் பேட்டி அளித்தார்.

அப்போது, "இந்த போர் பல ஆண்டுகள் நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கான ஆதரவை அளிக்க மேற்கு நாடுகள் தயாராக வேண்டும்," என்று ஸ்டோல்டன்பெர்க் கூறினார்.

“உக்ரைனுக்கான ஆதரவை நாம் நிறுத்திவிடக் கூடாது என மேற்கு நாடுகளை எச்சரித்தவர், உக்ரைனுக்கு தேவையான உதவிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ராணுவ ஆதரவு மட்டுமல்லாது, எரிசக்தி மற்றும் உணவுப் பொருள்களின் உதவிகளையும் நாம் வழங்க வேண்டும். போருக்கான விலை அதிகமாக இருந்தாலும்,  உக்ரைன் பலவீனம் அடைய நாம் விடக் கூடாது. ஆனால், உக்ரைனர்கள் ஒவ்வொரு நாளும் பல உயிர்களுடன் செலுத்த வேண்டிய விலையுடன் ஒப்பிட முடியாது.

ஒருவேளை, புதினின் ராணுவ இலக்குகள் வெற்றி பெற்றால், அது ஏற்படுத்தும் பாதிப்பு போருக்கான விலையை விட மிகப்பெரியதாக இருக்கும்" என அவர் எச்சரித்துள்ளார்.

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களையும், நவீன ஆயுதங்களையும் அளிப்பதன் மூலம் அந்நாடு தனது கிழக்குப் பகுதியை ரஷியாவிடம் இருந்து மீட்க முடியும் என்றும், போரில் வெற்றி பெற முடியும் என்றும் ஸ்டோலன்பெர்க் கூறினார்.

மேலும், ரஷியா தனது ராணுவ இலக்குகளை அடைவதில் கடந்த சில மாதங்களாக நிதானமாக முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ரஷியாவின் அணுசக்தித் திறன்களைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு, ​​ரஷியா அணுசக்திப் படைகளில் நேட்டோ அதிக அளவிலான தயார்நிலையைக் காணவில்லை என்று ஸ்டோல்டன்பெர்க் கூறினார்.

"இருப்பினும், ரஷியாவின் அணு ஆயுதத் தாக்குதல் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது" என்று கூறினார். “அணுவாயுதப் போரை வெல்ல முடியாது, அதை ஒருபோதும் நடத்தக்கூடாது என்பதை புதின் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டோல்டன்பெர்க் கூறினார்.

இந்த போர் சில ஏற்றுமதிகளுக்கான விநியோகச் சங்கிலிகளையும் சீர்குலைத்துள்ளது, அதாவது எண்ணெய் மற்றும் தானியங்கள், அதிக பணவீக்கத்தை அதிகப்படுத்துகிறது, இது இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கி வருவதால் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினருக்கு ஆழ்ந்த அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

போரை எதிர்கொள்ளும் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் 50 நாடுகளின் தலைவர்களை சந்தித்து பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுதங்களை வழங்க கோரிக்கை வைத்துள்ளது. கிழக்குப் பகுதியில் ரஷியப் படைகளின் புதிய தாக்குதல்களை முறியடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com