ரஷிய இசை, புத்தகங்களுக்கு உக்ரைனில் தடை

உக்ரைன் நாட்டின் பொது இடங்களில் ரஷிய இசைக்குத் தடை விதித்து உக்ரைன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
ரஷிய இசை, புத்தகங்களுக்கு உக்ரைனில் தடை


உக்ரைன் நாட்டின் பொது இடங்களில் ரஷிய இசைக்குத் தடை விதித்து உக்ரைன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

1991ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷிய இசைக் கலைஞர்களால் பாடப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட இசையை உக்ரைன் பொதுவெளிகளில் இசைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ படைகளில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

நான்கு மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே  போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் இசையை உக்ரைனின் பொதுஇடங்களில் இசைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி நிபந்தனைகளுடன், 1991ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷிய இசைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அல்லது பாடப்பட்ட பாடல்களை ஒலிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் ஒலிபரப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷியா, பெலாரஸ் ஆகிய நாடுகளின் புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கும் உக்ரைன் நாடாளுமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com