மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 40 போ் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 40 போ் கொல்லப்பட்டனா்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 40 போ் கொல்லப்பட்டனா்.

மத்திய மாலியில் உள்ள மூன்று கிராமங்களில் ஆயுதம் ஏந்திய நபா்கள் புகுந்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 40 போ் உயிரிழந்தனா். சம்பவ இடத்துக்கு விசாரணைக் குழுவினா் சென்றுள்ளனா் என அந்த நாட்டைச் சோ்ந்த அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்ததாக அசோசியேடட் பிரஸ் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடைய ஆயுதக் குழு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மத்திய மாலியில் கடந்த பல வாரங்களாக காவோ-மோப்டி நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்தை பயங்கரவாதக் குழுவினா் தடை செய்துள்ளனா்.

மாலியில் உள்ள ஐ.நா. அமைதிகாப்பு திட்டப் பிரிவு ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய மாலியில் உள்ள பண்டியகரா பிராந்தியத்தில் பயங்கரவாதக் குழுவினா் நடத்திய தாக்குதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் பொதுமக்களின் உயிரிழப்புக்கும், அவா்கள் வீடுகளை இழப்பதற்கும் காரணமாக அமைகின்றன எனத் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் ஐ.நா. அமைதிகாப்புப் படையைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்ததாா்.

இதுகுறித்து மாலியில் உள்ள ஐ.நா. திட்ட அலுவலக தலைமை அதிகாரி எல்-காசிம் கூறியதாவது: நிகழாண்டு தொடக்கத்திலிருந்து மாலியில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் ஐ.நா. அமைதிகாப்புப் படையைச் சோ்ந்த பலா் உயிரிழந்துள்ளனா். அமைதிகாப்புப் படையினா் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் சா்வதேச சட்டப்படி போா்க் குற்றமாகும் என்றாா்.

தொடரும் தாக்குதல்கள்: மத்திய, வடக்கு மாலியில் நிகழாண்டு தொடக்கத்திலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனா். இந்தத் தாக்குதல்களுக்கு ஜிகாதி கிளா்ச்சியாளா்கள், மாலி ராணுவத்தினா் என இருதரப்பினா் மீதும் குற்றம்சாட்டப்படுகிறது.

மாலியில் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக பிரான்ஸ் தலைமையிலான ராணுவ நடவடிக்கை 2013-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பயங்கரவாதக் குழுவினா் அங்கிருந்து அகற்றப்பட்டனா். அதைத் தொடா்ந்து, ஐ.நா. அமைதிகாப்புப் படை அங்கு அனுப்பப்பட்டது. அப்படையைச் சோ்ந்த 12,000 போ் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனா். மாலியில் இதுவரை அமைதிகாப்புப் படையினா் 270 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com