டான்பாஸ் நகரை அழிக்க ரஷியா முயற்சி: ஸெலென்ஸ்கி

ரஷியாவின் நோக்கம் டான்பாஸ் நகரை முழுமையாக அழிப்பதுதான் என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஸெலென்ஸ்கி
ஸெலென்ஸ்கி

ரஷியாவின் நோக்கம் டான்பாஸ் நகரை முழுமையாக அழிப்பதுதான் என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் மீதான ரஷியாவின் தாக்குதல் 4 மாதங்களை நிறைவு செய்யவுள்ள நிலையில் போர் காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போது, டான்பாஸ் பிராந்தியத்தின் செவெரோடொனட்ஸ்க் நகரை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

அதே நேரம், அருகிலுள்ள ஸ்லோவ்யான்க்ஸ் நகா் மீது தாக்குதல் நடத்தி முன்னேறவும் அவா்கள் ஆயத்தமாகி வருகின்றனா். அதற்காக, தொலைவிலிருந்து ராக்கெட் குண்டுகள், பீரங்கிகள் மூலம் அவா்கள் சரமாரி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில்,  சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு டான்பாஸ்  நகரை முழுமையாக அழிப்பதுதான் ரஷியாவின் நோக்கம் என உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்னும் சில நாள்களில் டான்பாஸ் நகரம் முழுமையாக ரஷியாவின் பிடிக்குள் சென்றுவிடும் என உக்ரைன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com