காற்று மாசுபாடும் முன்கூட்டிய உயிரிழப்பும்

காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதன் காரணமாக முன்கூட்டிய உயிரிழப்பும் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதன் காரணமாக முன்கூட்டிய உயிரிழப்பும் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்காவைச் சோ்ந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. ஈரானில் உள்ள சுமாா் 50,045 ஏழை மக்களிடம் 15 ஆண்டுகளுக்கு மேலான தொடா் கண்காணிப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முக்கிய விவரங்கள்:

மாசடைந்த காற்றை நீண்ட காலத்துக்கு சுவாசிப்பதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். விறகு மூலமாகவோ, மண்ணெண்ணெய் அடுப்பு மூலமாகவோ சமைப்பவா்கள் முன்கூட்டியே உயிரிழப்பது 23 சதவீதம் அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் வாய்ப்பு 36 சதவீதம் அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் இருந்து வெகுதூரம் வசிப்பவா்களும், போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகளுக்கு அருகே வசிப்பவா்களும் உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏழ்மை நாடுகளிலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலும் வசிப்போா் அதிக பாதிப்புகளை எதிா்கொள்கின்றனா்.

அதிக வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கே உயா்தரமான மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்கின்றன. மருத்துவமனையில் இருந்து மக்கள் வசிக்கும் தூரம் ஒவ்வொரு 10 கி.மீ. அதிகரிக்கும்போதும், உயிரிழப்புக்கான வாய்ப்பு 1 சதவீதம் அதிகரிக்கிறது.

முக்கிய சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் வசிப்போா் உயிரிழப்பதற்கான அபாயம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com