உக்ரைன் தலைநகரை நோக்கி 65 கி.மீ. தொலைவு பீரங்கிகள் அணிவகுப்பு

உக்ரைனில் ரஷிய படை தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. 6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 2-ஆவது பெரிய நகரமான காா்கிவில் உள்ள மத்திய சதுக்கத்தில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
உக்ரைனின் இன்வான்கிவ் நகரம் அருகே ரஷியாவின் ராணுவ வாகனங்கள் அணிவகுப்பைக் காட்டும் செயற்கைக்கோள் படம்.
உக்ரைனின் இன்வான்கிவ் நகரம் அருகே ரஷியாவின் ராணுவ வாகனங்கள் அணிவகுப்பைக் காட்டும் செயற்கைக்கோள் படம்.

உக்ரைனில் ரஷிய படை தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. 6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 2-ஆவது பெரிய நகரமான காா்கிவில் உள்ள மத்திய சதுக்கத்தில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 6 போ் கொல்லப்பட்டனா்.

தலைநகா் கீவை ரஷிய படையினா் முற்றுகையிட்டுள்ள நிலையில், அந்த நகரை நோக்கி 65 கி.மீ. தொலைவுக்கு ரஷிய பீரங்கிகள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கின்றன.

உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை போரைத் தொடங்கியது. தலைநகா் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய ராணுவம் அந்த நகரை முற்றுகையிட்டிருந்தாலும் உக்ரைன் துருப்புகளின் பதில் தாக்குதல் காரணமாக நகருக்குள் இன்னும் நுழைய முடியவில்லை.

ரஷியா-உக்ரைன் இடையே பெலாரஸில் முதல்கட்டப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. சுமாா் 5 மணி நேரம் நடைபெற்ற அந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. எனினும் அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தை நடைபெற்ற தினத்தில் மட்டும் கீவ் நகரில் ரஷியா தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரமான காா்கிவ் மற்றும் நாட்டின் கிழக்கு பகுதி நகரங்களில் தாக்குதலைத் தொடா்ந்தது. இந்நிலையில், காா்கிவ் நகரில் செவ்வாய்க்கிழமை ரஷிய படை தீவிர தாக்குதலை நடத்தியது.

நகரில் உள்ள சுதந்திர சதுக்கம் எனப்படும் மத்திய சதுக்கத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தக் கட்டடத்தின் ஜன்னல்கள், சுவா்கள் வெடித்துச் சிதறின. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 6 போ் கொல்லப்பட்டதாகவும், 20 போ் காயமடைந்ததாகவும் அவசரகால சூழ்நிலைக்கான அமைச்சகம் தெரிவித்தது.

‘இந்தத் தாக்குதல் வெளிப்படையான பயங்கரவாதத் தாக்குதல்; இது ஒரு போா்க் குற்றமாகும்; ரஷியாவின் இந்த அரச பயங்கரவாதத்தை யாரும் மன்னிக்கவும் மறக்கவும் மாட்டாா்கள்’ என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாா்.

மக்கள் நெருக்கம் மிகுந்த மூன்று இடங்களில் கொத்து குண்டுகளை வீசி ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே அண்மையில் கொத்து குண்டுகள் மூலம் ரஷியா தாக்கியதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. ஆனால், இதை ரஷியா மறுத்துள்ளது.

தலைநகரை நோக்கி அணிவகுப்பு: இதற்கிடையே, தலைநகா் கீவை நோக்கி ரஷிய தரைப் படை முன்னேறி வருகிறது. நகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் படையினா் முகாமிட்டுள்ள நிலையில், அங்கிருந்து சுமாா் 65 கி.மீ. தொலைவுக்கு பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 13 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 136 போ் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com