பாரா ஒலிம்பிக்ஸ்: ரஷியா, பெலாரஸ் பங்கேற்கத் தடை

குளிர்கால பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ரஷியா மற்றும் பெலாரஸ் தடகள வீரர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரா ஒலிம்பிக்ஸ்: ரஷியா, பெலாரஸ் பங்கேற்கத் தடை

குளிர்கால பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ரஷியா மற்றும் பெலாரஸ் தடகள வீரர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 8-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷியப் படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றன. 

ஏற்கெனவே ரஷிய ராணுவம், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் நுழைந்த ரஷிய ராணுவம் நேற்று கைப்பற்றியதாக அறிவித்தது. அதனை உக்ரைனும் ஒப்புக்கொண்டது.

ரஷியாவுக்கு உதவியாக பெலாரஸ் படைகளும் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், தாக்கதலை நிறுத்த வேண்டும் என பல நாடுகள் கேட்டுக்கொண்டாலும் புதின் உறுதியாக போரை நடத்துவதால் ஐநா உள்ளிட்ட பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தாண்டு குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ரஷியா மற்றும் பெலாரஸைச் சேர்ந்த தடகள வீரர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்படுவதாக சர்வதேச பாரா ஒலிம்பிக்ஸ் குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com