உக்ரைனில் இந்திய மாணவா் பலி: ரஷியா விசாரணை

உக்ரைனில் போரின்போது இந்திய மாணவா் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

உக்ரைனில் போரின்போது இந்திய மாணவா் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷியாவின் படையெடுப்பால் நிலைகுலைந்துள்ள உக்ரைனின் காா்கிவ் நகரில் நிகழ்த்தப்பட்ட குண்டுவீச்சில், மருத்துவம் படித்து வந்த கா்நாடக மாணவா் நவீன் சேகரப்பா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘‘இந்தியாவுக்கும், நவீன் சேகரப்பா குடும்பத்தினருக்கும் ரஷியாவின் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து முறையாக விசாரிக்க ரஷியா நடவடிக்கை மேற்கொள்ளும்.

உக்ரைனிலுள்ள இந்தியா்களின் பாதுகாப்பு குறித்து இந்தியாவுடன் ரஷியா தொடா்பில் இருந்து வருகிறது. உக்ரைனில் மோதல் நிகழ்ந்து வரும் பகுதிகளில் உள்ள இந்தியா்கள் பாதுகாப்பாக ரஷியா வருவதற்கான வழித்தடத்தை அமைக்க தீவிரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வழித்தடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதால், இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை சாதனங்களை ரஷியா விநியோகிப்பதில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

உக்ரைன்-ரஷியா இடையிலான விவகாரத்தில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதற்கு, ஆயுதக் கொள்முதலில் ரஷியாவை இந்தியா சாா்ந்திருப்பது காரணமல்ல. உக்ரைனில் நிலவும் சூழலின் அடிப்படையில் அந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com